ஆஸி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அனைத்து ஆட்டத்திலும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் மெல்போர்ன் நகரில் நாளை காலை 8.50 மணிக்கு நடக்கிறது.
சானியா அவுட்
சிட்னி டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சானியா மிர்சா (இந்தியா) ஹியூபர் (அமெரிக்கா) ஜோடி 26, 57 என்ற செட் கணக்கில் பெட்ரோவா (ரஷ்யா) செர்போட்னிக் (ஸ்லோவேனியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
நாளை 2வது டெஸ்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் அந்த அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் 2வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பூபதி ஜோடி தோல்வி
சிட்னி டென்னிஸ் போட்டி ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் மகேஷ்பூபதி (இந்தியா) டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடி 36, 46 என்ற நேர்செட்டில் மேக்ஸ்மிலினி (பெலாரஸ்) டீகு (ருமேனியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு காலிறுதியில் பயஸ் (இந்தியா) ஸ்டெபனக் (செக்குடியரசு) ஜோடி காயம் காரணமாக விலகியது.
பீட்டர்சனுக்கு முழு ஒப்பந்தம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பீட்டர்சன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சியாளர் மற்றும் கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பகிரங்க மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார். எனினும் குறுகிய கால ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து தற்போது முழுநேர ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சாமுவேல்ஸ் டவுட்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாமு வேல்ஸ், பிக்பாஸ் 2020 தொடரில் காயமடைந்தார். மலிங்கா வீசிய பந்து அவரது நெற்றியை பதம் பார்த் தது. காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதி ராக நடக்கும் ஒரு நாள் போட்டி தொடரில் சாமுவேல்ஸ் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.