நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... டிஜிட்டல் கேமரா வரவால சத்தமில்லாம ஒரு துறை காணாம போயிருச்சாம். முன்னல்லாம் ஸ்டுடியோ லேப்ல பட பிரின்ட்டுக்காக தயாரிப்புங்க தவமா தவமிருப்பாங்களாம். டிஜிட்டல் கேமரா வந்தப்பறம் லேப்களுக்கு வேல இல்லாம போயிடுச்சாம். ஒரு சில ஸ்டுடியோக்கள் லேப மட்டுமே நம்பி இயங்கிட்டிருந்துச் சாம். இப்ப அதெல்லாம் காத்து வாங்குதாம்... காத்து வாங்குதாம்... லேப் ஊழியருங்க வேற வேலைய பார்த்து போயிட்டாங்களாம்... போயிட்டாங்களாம்...
அனுஷ் நடிகைக்கு பாலிவுட்ல வாய்ப்புகள் வந்துட்டே இருக்காம். ஆனா, நடிகை அதை ஏத்துக்க மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்... காரணம், லவ்வர்தானாம். பாலிவுட்டுக்கு போனா, நடிகை தன்னோட கன்ட்ரோல்லேருந்து நழுவிப்போயிடுவாருன்னு லவ்வரு பயப்படுறாராம்... பயப்படுறாராம்... இதனால சினிமா உலகத்தை சேர்ந்த அந்த சீக்ரெட் லவ்வரு, நடிகைக்கு பாலிவுட்டுக்கு போக தடை போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...
பாரதி கிங் இயக்கம் டிடிஎச் மேட்டர்ல வேல்டு ஹீரோவுக்கு சப்போர்ட்டா பேசறாராம்... பேசறாராம்... சமீபத்துல ஒரு மீட்டிங்ல பேசறப்போ பேச்சோட பேச்சா தன்னோட ஆதங்கத்தை இயக்கம் வெளிப்படுத்தினாராம். ‘இந்த நாயகனுக்கு சப்போர்ட் பண்றதுக்கு காரணம் அவருகிட்ட கால்ஷீட் கேக்கறதுக்காகவா? கிடையாது. இல்லே அவரே என்னை கூப்பிட்டு கால்ஷீட் கொடுப்பாரா? கிடையாதுன்னு பொடிவச்சி பேசினாராம்... பேசினாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook