நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
தலைநகரத்துல நடந்த பலாத்கார சம்பவத்தை படமாக்கப் போறதா கோலிவுட், டோலிவுட் இயக்கங்க சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்... இருக்காங்களாம்... இதுபத்தி பகிரங்கமா டோலிவுட் இயக்கம் ஒருத்தர் அறிவிச்சிருக்காராம். இதுல நடிக்க தலைநகரத்துக்கு போய் டிராமா ஆர்ட்டிஸ்ட கூட்டிட்டு வர்றதோட மும்மொழில படத்த ரிலீஸ் பண்ண போறதாவும் சொல்றாராம். ஆனா இதுக்கு டோலிவுட் இயக்க சங்கத்துக்காரங்க ஆட்சேபம் தெரிவிச்சிருக்காங்களாம். ‘ஒரு வருஷத்துக்கு முன்னாடி எடுத்து வச்ச படத்தை, பணம் பண்றதுக்காக இப்ப இயக்கப் போறதா கதை விடுறாரு. இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டு’னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
ரொம்ப நாளா ஃபேன்ஸுங்ககிட்ட அபிப்ராயம் சொல்லாம தல ஹீரோ காலம் கடத்திட்டாராம்... கடத்திட்டாராம்... இப்ப அடுத்தடுத்து ரெண்டு படத்துல நடிக்கறதால அதுபத்தி அப்பப்ப ஃபேன்ஸுங்களுக்கு தகவல் சொல்ல முடிவு பண்ணிருக்காராம். நடிக்கற, நடிக்கப்போற ரெண்டு படமுமே ஃபேன்ஸுங்களுக்கு செம ட்ரீட்டா இருக்கும்னு இனிப்பு சேதி சொல்லி இருக்காராம்... இருக்காராம்...
படம் முடிஞ்சும் ரிலீஸ் பண்ண முடியாம சில ஹீரோக்கள் தவிக்கறாங்களாம்... தவிக்கறாங்களாம்... இதுல அப்பப்ப சிக்கல்ல மாட்றது உசரமான ஷால் நடிகர்தானாம். ஒண்ணுக்கு ரெண்டு படம் நடிச்சி முடிச்சிருக்காராம். ஒரே நேரத்துல ரெண்டு படத்தையும் ரிலீஸ் பண்ற சூழல் இல்லாததால சுந்தரமான இயக்கத்துல நடிச்ச பட ரிலீஸ தள்ளிவச்சிட்டு திருவான இயக்கத்துல நடிச்ச படத்தை வெளியிட ஐடியா கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்...
|