படப்பிடிப்பில் நடிகர் விவேக் காயம்
சென்னை: ‘பத்தாயிரம் கோடி என்ற படத்தில் நடித்து வருகிறார் விவேக். இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் நேற்று நடந்தது. தரையில் படுத்திருக்கும் ஒருவரை தாண்டிச் செல்லும் காட்சியில் விவேக் நடித்தபோது, தவறி விழுந்தார். அவரது வலது கால் முட்டியில் அடிபட்டது. வலியால் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பில் சிறிய அளவில் முறிவு இருந்தது தெரிந்தது. உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.