பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (35). மீஞ்சூர் பஜார் ரயில் நிலையம் சாலையில் பங்க் கடை வைத்துள்ளார். நேற்று விற்பனை முடிந்ததும் கடையை மூடிவிட்டு சங்கர் வீட்டிற்கு புறப்பட்டார். இன்று அதிகாலை கடைக்கு வந்தபோது கடையின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் சீட்டு உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையில் உள்ள ரூ. 7 ஆயிரம், பீடி, சிகரெட், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரிக்கிறார்கள். இதே போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சங்கர் கடையில் திருடு போனது. ஒரே நபரின் கைவரிசையா என்று விசாரணை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook