குழந்தை இல்லாததால் 2வது திருமணம் செய்த தொழிலாளி கைது
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் எட்டியப்பன் (30), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (26). இவர்களுக்கு கடந்த 2002ல் திருமணம் ஆனது. குழந்தை எதுவும் இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தையில்லை என்று கூறி எட்டியப்பன் மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மனைவிக்கு தெரியாமல் எட்டியப்பன் அதே கிராமத்தை சேர்ந்த வாசு என்பவரின் மகள் பவளக்கொடியை புட்லூர் கோயிலில் 2வது திருமணம் செய்துள்ளார். இதையறிந்த ஜோதி, திருவள்ளூர் மகளிர் போலீசில் கணவர் உள்பட 6 பேர் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து எட்டியப்பனை கைது செய்து விசாரிக்கிறார்கள்.