இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சேவாக் சமீப காலமாக எல்லா வகையான போட்டிகளிலும் ரன்குவிக்க திணறி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வருகிற 15,ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இழந்த பார்மை மீட்கும் வகையில் சேவாக், காசியாபாத்தில் உ.பி. அணிக்கு எதிராக நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடிவருகிறார்.நேற்றைய ஆட்டத்தின்போது சேவாக் காயமடைந்தார். முகமதுகைப் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று பிடித்த போது சேவாக்கின் மோதிர விரலில் அடிபட்டது. உடனடியாக களத்தில் இருந்து அவர் வெளியேறினார். நீண்டநேரம் அவர் பீல்டிங்கிற்கு திரும்பவில்லை. தேநீர் இடைவேளைக்கு பிறகு கைவிரலில் பேன்டேஜ் போட்டபடி மைதானத்திற்கு திரும்பினார். ஏற்கனவே பார்மில் இல்லாத பிரச்னை, 20,20 ஓய்வு தொடர்பாக எழுந்த வதந்தி என பரபரப்புக்குள்ளான சேவாக்கின் காயம் கவலையடைய செய்துள்ளது. இதற்கிடையே காயத்தின் தன்மை சிறிய அளவில்தான் உள்ளது. 2வது இன்னிங்சில் சேவாக் நிச்சயம் பேட்டிங் செய்வார் என டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சீவ் சர்மா தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook