டாக்டர் சாய்னா: இந்திய பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா வுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. சர்வதேச போட்டிகளால் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்த சாய்னா, இந்த டாக்டர் பட்டத்தால் தனது கனவு நிறைவேறி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் ரைடர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜெசிரைடர் உள்ளூர் போட்டியில் ஏற்கனவே நடுவரை திட்டியதாக சர்ச்சைக்கு ஆளானார். மேலும் போதையில் ரகளை செய்தது உள்ளிட்ட பிரச்னைகளில் வாரியத்தால் கண்டிக்கப்பட்டார். இந்நிலையில் நேப்பியரில் நடந்த சென்ட்ரல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் இவான் வார்க்கிங், கிறிஸ்ஹாபினி ஆகியோரிடம் கடும் வார்த்தை மோதலில் ரைடர் ஈடுபட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook