அரசு வங்கிகளில் ஒன்றான ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட்/ கிளார்க் பணிகளுக்கு டிகிரி படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி: ஜூனியர் அசிஸ்டென்ட்/கிளார்க்: மொத்த இடங்கள்: 148. மாநில வாரியாக காலியிடங்கள் விவரம்: தமிழ்நாடு-100, கர்நாடகா-24, ஆந்திரா-11, கேரளா-5, மகாராஷ்டிரா-4, குஜராத்-2, மேற்குவங்கம்-2. சம்பளம்: ரூ.7,200-19,300 மற்றும் இதர சலுகைகள். வயது: 18 லிருந்து 25க் குள். தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி. கம்ப் யூட்டர் அறிவும், விண்ணப்பிக்க உள்ள மாநில மொழியும் தெரிந்திருக்க வேண் டும். மேலும் பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்காக 2011ல் நடத்தப்பட்ட ஐபிபிஎஸ் தேர்வில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.200/- இதை ஆப் லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆன்லைன் முறையில் மாஸ்டர்/விசா டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது www.repcobank.com இணைய தளத்தில் செலான் படிவங்களை பதிவிறக்கம் செய்து இந்தியன் வங்கி கிளைகளில் பணத்தை செலுத்தலாம். ஆப்லைனில் REPCO BANK RECRUITMENT FEE COLLECTION ACCOUNT என்ற பெயரில் அக்கவுன்ட் எண்: 606234382 North Usman Road, T.Nagar, Chennai என்ற வங்கி கணக்கில் சேருமாறு செலுத்த வேண்டும். www.repcobank.com என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.5.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook