மத்திய போலீஸ் படை சஷஸ்த்ர சீமா பால் படைப்பிரிவில் தலைமை காவலர் பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம். பணி: ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்ட் ரியல்): 132 இடங்கள். சம்பளம்: ரூ.5,200- 20,200 தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள். வயது: 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் செகரட்டரியல் பிராக்டீஸ்/மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ்/கமர்ஷியல் பிராக்டீஸ் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இத்துடன் பொது மற்றும் ஓபிசியினர் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்துக்கு 20 வார்த்தைகள் கம்ப்யூட் டரில் டைப்பிங் செய்ய வேண்டும். உடல் தகுதிகள்: ஆண்கள்: உயரம் 167.5 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. பெண்கள்: உயரம் 157 செ.மீ., சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை Accounts Officer, SHQ, SSB, Gorakhpur (U.P.) மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் டிடி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.15 .
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook