நடிகரும் ஆர்ட் டைரக்டருமான வீரமான சமருக்கும் கலை இயக்குனருங்க சங்க தலக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... இந்த லடாய் வாரக்கணக்குல நீடிச்சதாம். அரங்க அமைப்புக்கு ஆள் அனுப்பறதுல தொடங்கி, புதுபடத்துக்கு ஒப்பந்தம் ஆகிற வரைல பிரச்னை நீண்டுகிட்டே போச்சாம்... போச்சாம்... உர்ரான வீரமானவரு நிர்வாகி பேச்சுக்கு கட்டுப்பட மறுத்துட்டாராம். இதையடுத்து சங்கத்துலயிருந்து அவரை நீக்கிட்டாங்களாம். இந்த பிரச்னை குறித்து இப்ப பஞ்சாயத்து ஓடிகிட்டிருக்காம்... ஓடிகிட்டிருக்காம்...
செவன்த் சென்ஸ் ஹீரோவை கட்டினப்பிறகு குடும்பம், குழந்தைன்னு குஷி ஹீரோயின் பிஸியா இருந்துட்டாராம்... இருந்துட்டாராம்... வருஷங்கள் ஓடிப்போனதுல இண்டஸ்ட்ரி தோழிகளோட டச் விட்டுப்போச்சாம். எல்லாரையும் சந்திக்கணும்னு நெனச்சவருக்கு பர்த் டே தோதா அமைஞ்சதாம். நட்சத்திர ஓட்டல்ல பங்ஷன் வெச்சி தோழிகளை அழைச்சாராம்... அழைச்சாராம்... எல்லாரும் ஆஜராயிட்டாங்களாம். ஒரு சிலர், ‘இன்னும் ஹீரோயின் மாதிரிதானே இருக்கே, மறுபடியும் எப்ப நடிக்க வரப்போறேÕன்னு கேட்டு உசுப்பிவிட்டாங்களாம்... உசுப்பிவிட்டாங்களாம்...
பிரிய தரிசன இயக்கம் பாலிவுட்ல கவனம் செலுத்துறாரு. பார்முலா படங்கள் எடுக்கறதுல தனக்கு உடன்பாடு இல்லேன்னு சொல்றவர் மத்தவங்களுக்கும் அட்வைஸ் பண்றாராம். பார்முலா படங்கள எடுக்கறது மாறணும். ஹாலிவுட் அளவுக்கு செலவு பண்ணி படம் எடுக்க முடியலென்னாலும் ஸ்கிரிப்ட்டாவது வித்தியாசமா பண்ணணும்னு உதவி இயக்குனருங்கங்கிட்ட கருத்து சொல்றாராம்... சொல்றாராம்... Ôஇவரே காமெடியை மட்டும் நம்பித்தான் படங்களே எடுத்துட்டு இருக்கிறாரு. நமக்கு அட்வைஸ் பண்றாருÕன்னு உதவிகள் புலம்புறாங்களாம்... புலம்புறாங்களாம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook