பைனலில் நுழைவது யார்? ஆஸி. , வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை
உலககோப்பை 20,20 இரண்டாவது அரையிறுதியில் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸி. அணி அதிரடி வெற்றிகளை குவித்த நிலையில் பாகிஸ்தானிடம் சுழற்பந்து வீச்சில் சுருண்டது. இன்றைய ஆட்டமும் அதே ஆடுகளத்தில் தான் நடக்கிறது. வாட்சன் , வார்னர் ஜோடியின் அதிரடியை நம்பியே பேட்டிங் உள்ளது. இவர்கள் விரைவில் வீழ்ந்துவிட்டால் ரன்குவிப்பு மந்தமாகிவிடுவது பலவீனமாக உள் ளது. ஹசி, கேமரூன் ஒயிட், கேப்டன் ஜார்ஜ் பெய்லி உள்ளிட்ட வீரர்கள் பொறுப்புடன் ஆடி னால் வலு சேர்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு டேவிட் ஹசி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் வேகப்பந்து வீச்சு சவால் கொடுக்கும். ஹாக்கின் சுழல் வலுசேர்க்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி பட்டாளங் களை கொண்டுள்ளது. கெய்லுடன் துவக்க பேட்டிங்கில் ஜாண்சன் சார்லசும் வான வேடிக்கை காட்டுவது அணியை வலுவாக்கியுள்ளது. பொல்லார்டு, பிராவோ, சாமு வேல்ஸ் ஆகி யோ ரும் பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர். சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சுனில் நரேன், சாமுவேல் பத்ரி ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.