கெய்ல் அறையில் விருந்து : 3 இளம்பெண்கள் கைது
20,20 உலககோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடுகிறது. இந்நிலையில் முன்னணி வீரரான கெய்ல், ஆந்த்ரே ரசல், ஸ்மித், எட்வர்ட்ஸ் ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். உலககோப்பை போட்டிகளுக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொழும்பில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கெய்ல் அறையில் விருந்து நடந்ததாக தெரிகிறது. இதில் சக அணி வீரர்கள் ஆந்த்ரே ரசல், ஸ்மித், எட்வர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்களும் பங்கேற்றுள்ளனர். அனுமதி பெறாமல் வீரர்கள் அறையில் பெண்கள் இருப்பதை அறிந்த பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று 3 பெண்களையும் பிடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். எனினும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகமோ, வீரர்களோ எதுவும் வாய் திறக்கவில்லை. ஐசிசியும் கருத்து கூற மறுத்துவிட்டது. எனினும் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.