புதுடெல்லி: மனி உரிமை மீறலில், நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 2வது இடத்தில் டெல்லி உள்ளது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு: கடந்த 2007 முதல் 2010ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 72,408 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007-08ல் ஒரு லட்சத்து 302 வழக்குகளும், 2008-09ல் 90,512 வழக்குகளும், 2009-10ல் 81,594 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து, 63,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007-08ல் 58,865 வழக்குகளும், 2008-09ல் 53,492 வழக்குகளும், 2009-10ல் 51,270 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இங்கு 2007-08ல் 6,210 வழக்குகளும், 2008-09ல் 5,433 வழக்குகளும், 2009-10ல் 5,288 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பீகாரில், 10,978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007-08ல் 4,595 வழக்குகளும், 2008-09ல் 3,490 வழக்குகளும், 2009-10ல் 2,893 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007 முதல் 2010ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 2,821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் 2,419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேற்குவங்கத்தில் 3,224 வழக்குகளும் நாகாலாந்தில் 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் மிக குறைவான மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது லட்சத்தீவில்தான். இங்கு 2007 - 2010ம் ஆண்டில் வெறும் 5 வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook