இஸ்லாமாபாத்: இந்திய பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இருநாட்டு வர்த்தகத் துறை செயலர்களின் 2 நாள் பேச்சுவார்த்தை, இஸ்லாமாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்திய வர்த்தகத் துறை செயலர் எஸ்.ஆர்.ராவ், பாகிஸ் தான் வர்த்தகத் துறை செயலர் முனிர் குரேஷி உள்பட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளிலும் பரஸ்பரம் வங்கி கிளைகள் தொடங்குவது உள்பட முக்கிய வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டு நாள் நடக்கும் பேச்சுக்கு பின், நுகர்வோர் நலன், வர்த்தகம் தொடர்பான குறைகளை தீர்ப்பது இருநாட்டு பொருட்களின் தர நிர்ணயம் தொடர்பான 3 ஒப்பந்தங்களில் வர்த்தக துறை செயலர்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">