Untitled Document
2012
20
Sep
பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலி

பழநி: பழநியில் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலியானது. தாய் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது. பழநியை அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் தென்னரசு. முட்டை வியாபாரி. இவரது மனைவி சத்தியபாமா. இவர்களது 2 வயது மகன் ஹரிகிருஷ்ணன். சத்தியபாமாவின் சகோதரி சிவகாமி மகன் ஹரிஸ்ரீ(6). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறான். ஹரிஸ்ரீயை பஸ் ஏற்றி விடுவதற்காக சத்தியபாமா அழைத்து வந்தார். அப்போது அவரது பின்னாலேயே, ஹரிகிருஷ்ணனும் ஓடி வந்துள்ளான். ஹரிஸ்ரீயை வேனில் ஏற்றி விட்டதும், டிரைவர் வேனை கிளப்பினார். அப்போது சத்தியபாமாவின் பின்னால் வந்த ஹரிகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. கண் எதிரிலேயே மகன், இறந்ததை கண்டு சத்தியபாமா கதறி அழுதார். தகவலறிந்த பழநி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டையில் விழுந்து இறந்தார். இச்சம்பவத்திற்கு பின்பு, பள்ளி வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். இருப்பினும், பள்ளி வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது.  திருச்சி மாவட்டத்தில் 2 தினங்களுக்கு முன்பு பள்ளி வாகன விபத்தில் இரு மாணவர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour