வேலூர்: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு அலுவலர், சத்துவாச்சாரியில் உள்ள தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபட்டார். சிலைக்கு 5 சவரன் செயினை அணிவித்து பூஜை செய்தார். மாலையில் எஸ்பி அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக போட்டுள்ளார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. வீட்டுக்குச் சென்ற பிறகுதான் 5 சவரன் செயினுடன் விநாயகர் சிலையை கிணற்றுக்குள் போட்டது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு அந்த அதிகாரி தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள், அந்த கிணற்றுக்குள் இறங்கி விநாயகர் சிலை கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச் செயினை மீட்டு அதிகாரியிடம் கொடுத்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">