ஜோலார்பேட்டை: அகில இந்திய பூப்பந்தாட்ட கழகம், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், வேலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி ஜோலார்பேட்டை ரயில்வே கலையரங்க வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மும்பை, கரக்பூர், கேரளா, கொல்கத்தா, வைசாக் உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளான சென்னை ஐசிஎப் அணிக்கு முதல் பரிசு ரூ.30,000, கோவை சோயாசக்தி அணிக்கு இரண்டாம் பரிசு ரூ.25,000, தஞ்சை ராஜகிரி அணிக்கு மூன்றாம் பரிசாக ரூ.20,000, சென்னை ஐஓபி அணிக்கு நான்காம் பரிசாக ரூ.15,000 ஆகியவற்றை ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி வீரமணி வழங்கி பாராட்டினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">