ஒசூர்: பெரியார் தி.க. கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி கொலை வழக்கு தொடர்பாக தளி தொகுதி இந்திய கம்யூனிஸட் எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாகவும், கனிம வளங்களை வெட்டி எடுத்ததாகவும், உத்தனப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையங்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் கனிம வளங்களை வெட்டி எடுத்த வழக்கில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோரை உத்தனப்பள்ளி போலீசார் மீண்டும் நேற்று மாலை கைது செய்தனர். இருவரும், நேற்று இரவு ஒசூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ராமச்சந்திரன் எம்எல்ஏ, அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோரை வருகிற 7ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook