ஐதராபாத் டெஸ்ட் நியூசி. நிதான ஆட்டம்
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது. நியூசிலாந்து அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. பிராங்க்ளின் 43 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 6, ஓஜா 3, உமேஷ்யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் 3வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. மெக்குலம் 16, வில்லியம்சன் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 10.55 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. மெக்குலம்வில்லியம்சன் ஜோடி இந்திய சுழற் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ஆடியது. 43 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது. மெக்குலம் 39, வில்லியம்சன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.