இரட்டையரில் பதக்கத்தை கோட்டைவிட்டது மகேஷ் பூபதி - போபண்ணா ஜோடி
அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடந்து வந்த டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் - ஜோகோவிக் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-0, 7-6(7) என்ற செட் கணக்கில் பெடரர் வென்று பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது 5வது சின்சினாட்டி பட்டமாகும். 76வது சாம்பியன் பட்டமாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி யின் ஹெர்பர், சீனாவின் லீ நா ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் லீ நா 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் லின்ட்ஸ்டெட் - டெகு ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பூபதி - போபண்ணா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook