போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை கல்லூரியில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட்) பல்வேறு பாடப்பிரிவுகளில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. Fellow Programme in Management (Doctoral Level) என்றழைக்கப்படும் இப்படிப்பின் கால அளவு 4 ஆண்டு கள். Communication and Extension Management, Ecosystem and Environment Management, Environment and Development Economics. Financial Management, Human Resource Management, Information Technology and Quantitative Techniques, Marketing Management, Socialogy and Community Development, Technical Forestry ஆகிய 9 பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் பட்டப் படிப்பை முடித்து, மேற்கண்ட பாடப்பிரிவுகள் தொடர்புடைய 2 வருட முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முதுநிலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பிடெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க «வுண்டும். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் 1.7.2025 தேதிப்படி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். CAT/GMAT/UGCCSIR/GATE/ICAR போன்ற தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தேவையான கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அல்லது பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வரும் ஏப்ரல்/மே மாதத்தில் போபாலில் நடைபெறும் நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவர். ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிக்கு உதவித்தொகையாக முதல் 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம், அடுத்த 2 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ.14 ஆயிரம் வீதம் வழங்கப்படும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.200ஐ 'The Director, IIFM, Bhopal' என்ற பெயரில் டிடியாக செலுத்த வேண்டும். www.iifm.ac.in/fpm என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல், கட்டண டிடி ஆகியவற்றை இணைத்து 'The Chairperson, FPM Admissions, Indian Institute of Forest Management, Nehru Nagar, Bhopal 462003' என்ற முகவரிக்கு வரும் மார்ச் 31க்குள் அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook