புதுடெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா பயிற்சிக்கல்லூரியில் கம்பெனி செகரட்டரி படிப்பு தொலைநெறிக்கல்வி அடிப்படையில் வழங்கப்படுகிறது. Company Secretary (CS) (Executive Programme) என்றழைக்கப்படும் இப்படிப்பில் வருடம் முழுவதும் சேர மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு வணிக நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பத்தை நேரில் பெற ரூ.300ம், தபாலில் பெற கூடுதலாக ரூ.50ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனை ‘The Institute of Company Secretaries of India‘ என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். www.icsi.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஐசிஎஸ்ஐ கல்லூரி தகவல் மைய முகவரியை நேரில் அணுகியோ, தபால் மூலமோ பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தபாலில் விண்ணப்பம் பெற ‘Institute of Company Secretaries of India, 22 Institutional Area, Lodi Road, New Delhi 110003 என்ற முகவரிக்கு கட்டண டிடி மற்றும் முழு முகவரியுடன் கூடிய கோரிக்கை கடிதத்தை இணைத்து அனுப்பவேண்டும். மேலும் விவரங்களை 011-41504444, 45341076 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook