மரபணு சோதனையில் உறுதி ரோகித் சேகரின் தந்தை என்.டி.திவாரி
புதுடெல்லி: என்.டி.திவாரி தான் ரோகித் சேகர் என்ற இளைஞரின் தந்தை என்பது, மரபணு சோதனையில் உறுதியாகியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் என்.டி.திவாரியிடம் நடத்திய, மரபணு சோதனையின் மூலம், ரோகித்தின் தந்தை திவாரி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம் உஜ்வாலா சர்மா-திவாரிக்கு பிறந்தவர் தான் ரோகித் சேகர் என்பது மரபணு சோதனையில், உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக திவாரி தான் தனது தந்தை என்பதை உறுதி செய்ய கோரி, நீதிமன்றத்தில் ரோகித் வழக்கு தொடர்ந்திருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான திவாரி, ஆந்திர மாநில ஆளுநராக இருந்த போது பாலியல் புகாரில் சிக்கி, பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.