கட்டாய கல்வி கட்டண விவகாரம் : கலெக்டரிடம் வி.சிறுத்தைகள் மனு
திருவள்ளூர் :திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் கொடுத்துள்ள மனு: தமிழகத்தில் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட , பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் திருப்பி செலுத்தப்படாத கட்டாய கல்விக் கட்டணம் அனைத்தையும் மத்திய அரசின் உதவி தொகை திட்டத்தின் கீழ் 2011 ,2012ம் கல்வி ஆண்டில் இருந்து வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறந்து 2 மாதம் ஆன நிலையிலும், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்ற நிலையிலும், மேற்குறிப்பிட்ட அரசு ஆணை இதுவரை கல்வி நிறுவனங்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும் சென்று சேரவில்லை. எனவே, இந்த அரசாணை அவர்களுக்கு சென்று சேரவும், அதன் மூலம் அவர்கள் பயன்பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். அப்போது, மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், அருண் கவுதம், வக்கீல் சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.