Untitled Document
2012
10
May
கூந்தல் அலங்காரத்தில் புரட்சி குட்டை முடி ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் மரணம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: பெண்களின் முடி அலங்காரத்தில் புதுமை புகுத்தி, நீண்ட கூந்தலை வாரிப் பின்னி, சிக்கெடுக்கும் அவஸ்தையில் இருந்து பெண்களுக்கு ‘விடுதலை’ கொடுத்த ஹேர் ஸ்டைலிஸ்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கடந்த 1960,களில் பெண்களின் முடி அலங்காரம் பெரும் பிரச்னையாக இருந்தது. சுருள் சுருளாக, அடர்த்தியாக, நீளமாக இருந்ததால், பல பெண்கள் ஈவ்டீசிங் போன்ற பிரச்னைகளுக்கு ஆளானார்கள். அப்போது புதிய ஸ்டைலில் பெண்களுக்கு முடி அலங்காரம் செய்து உலகளவில் பிரபலமானவர் விடால் சசூன். இவர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிறந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறியவர். இவர், வாஷ் அண்ட் வியர் என்ற ஸ்லோகத்துடன், பெண்களுக்கு புதுமையான ஸ்டைலில் முடி அலங்காரம் செய்ய தொடங்கினார்.

பெண்களின் கூந்தலில் சிக்கு எடுத்து, நீளமான முடியை குட்டையாக வெட்டி கழுத்து வரைக்கும் இருக்கும் அளவுக்கு அலங்காரம் செய்து கொடுத்தார். இந்த அலங்காரத்தில் தலைமுடியை பராமரிப்பது பெண்களுக்கு மிக எளிதாக இருந்தது. இது பெண்ணுரிமை இயக்கங்களால் பெரும் வரவேற்பு பெற்றது. பிரபல பேஷன் டிசைனர் மேரி குவான்ட் என்பவரும் விடாலிடம் முடி அலங்காரம் செய்து கொண்டார். டிசைனர் மேரிதான் குட்டை பாவாடை (மினி ஸ்கர்ட்), குட்டை பேன்ட் (ஹாட் பேன்ட்) போன்ற ஆடைகளை பெண்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். இன்று வரை பெண்கள் இந்த ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

அதேபோல் விடாலின் குட்டை முடி அலங்காரமும் இன்று வரை தொடர்கிறது. முடி அலங்காரம் மட்டுமன்றி தனது பெயரில் பல ஷாம்புகள், அழகு சாதன பொருட்களையும் விடால் அறிமுகப்படுத்தினார். உலகளவில் பெண்களின் முடி அலங்காரத்தில் புரட்சியை ஏற்படுத்திய விடால், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடலுக்கு பேஷன், மாடலிங் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,