Untitled Document
2012
09
May
பெண் உடை அணிய ஆண் கைதி விருப்பம்: கோஸ்டாரிகா கோர்ட் அனுமதி


சான் ஜோஸ்: பெண் உடைகள் அணிந்துகொள்ள விரும்பும் ஆண் கைதிக்கு அவற்றை வழங்க கோஸ்டாரிகா சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவை சேர்ந்தவர் டேவிட் அவிலா உலோவா (22). போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் தலைநகர் சான் ஜோஸ் அருகே உள்ள லா ரிபார்மா சிறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடைக்கப்பட்டார். சிறை விதிமுறைப்படி, ஆண் கைதிக்கான உடைகள் அவருக்கு வழங்கப்பட்டன. அதை பெற்றுக்கொள்ள மறுத்த அவர் கோரிக்கை மனு ஒன்றை சிறை நிர்வாகத்துக்கு அனுப்பினார். ‘பெண்களுக்கான உடை, நகை அணிவதிலும் லிப்ஸ்டிக் போன்ற அழகுசாதன பொருட்கள் பயன்படுத்துவதிலும் சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. பெயரைக்கூட ஷெர்லின் டடியானா என்று மாற்றிக் கொண்டுள்ளேன். எனவே, பெண் கைதிக்கான உடையை எனக்கு வழங்க வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார்.
ஆனால், ஆண்களுக்கு பெண் உடைகளை வழங்க சிறை சட்டத்தில் இடம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, அவர் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கோஸ்டாரிகா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். ‘விருப்பத்துக்கு ஏற்ற உடை அணிய கைதிகளுக்கு உரிமை உண்டு. அதே நேரம், சிறை விதிமுறைகளை எந்த வகையிலும் மீறக்கூடாது. நாகரிகம் தவறக்கூடாது’ என்று கூறிய நீதிபதிகள், டேவிட் அவிலாவுக்கு பெண் உடைகள் வழங்க சிறைக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்தில் வேறு சிறைக்கு டேவிட் மாற்றப்பட்டுள்ளார். ‘தற்போதைய சிறையில் அதிகாரிகள் என் மன உணர்வை நன்கு புரிந்துகொண்டுள்ளனர்’ என்று அவர் கூறினார். சிறையில் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். நேரம் கிடைக்கும்போது படிக்கிறார். இசைக்குழுவில் இருக்கிறார். 6 மாதத்தில் பரோலில் வெளியே வருகிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,