ராஜஸ்தான் , புனே பலப்பரீட்சை
ஐபிஎல்லில் இன்று மாலை 4 மணிக்கு புனே , ராஜஸ்தான் அணி கள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அணி 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்விகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து அந்த அணிக்கு 5 ஆட்டங்கள் உள்ளன. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிட்டும். தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் கடைசியாக பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ரகானே கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. ஓவிஸ்ஷாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். ஹாட்ஜ் ரன் சேர்க்க துவங்கியுள்ளது வலுசேர்க்கிறது. டிராவிட்டும் நல்ல பார்மில் உள்ளார். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குவதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புனே அணி இந்த சீசனை சிறப்பாக துவக்கிய நிலையில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்தித்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் பதற்றத்துடன் ஆடி வெற்றியை கோட்டைவிடுவது வாடிக்கையாக உள்ளது.
அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது. இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து புனே அணிக்கு 4 ஆட்டங்கள் உள்ளது. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகளைதான் பெற முடியும். ஏற்கனவே கொல்கத்தா 17, டெல்லி 16, மும்பை 14 புள்ளிகள் பெற்றுள்ளன. அந்த அணிகளுக்கு இன்னும் சில லீக் ஆட்டங்கள் உள்ளது. இவை தவிர சென்னை 11, பெங்களூர் 11, பஞ்சாப் 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகளுக்கு இன்னும் 5 ஆட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் முடிவுகளை பொறுத்துதான் புனே அணியின் தலைவிதி தெரியவரும். எனினும் புனே அணிக்கான அடுத்த சுற்று வாய்ப்பு கானல்நீர் கதைதான்.