கரூரில் செப். 15ம் தேதி மதிமுக மாநாடு: வைகோ
வானூர் :விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ம.தி.மு.க 19வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சி கொடியை பொதுச்செயலாளர் வைகோ ஏற்றினார். முன்னதாக அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: பொதுத்தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவர்களை பெற்றோர்கள் திட்டாமல் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களிடம் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மதிமுக ஆரம்பித்து 18 ஆண்டுகள் நிறைவடைந்து 6ம் தேதி 19ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அண்ணா பிறந்தநாள், திராவிட இயக்க நூற்றாண்டு ஆகியவற்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கரூரில் செப்டம்பர் 15ம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு வைகோ பேசினார்.