டென்மார்க் தலைநகரில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை
லண்டன் :டென்மார்க் பார் அமைந்துள்ள வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று பார் உரிமையாளர் தடை விதித்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ளது Ôநெவர் மைண்ட் பார்Õ. இந்த பார் உரிமையாளர் கிறிஸ்டியன் கார்ல்சன். நெவர் மைண்ட் பாரை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறார். ஆனால், தம்பதிகளும் பாருக்கு வரலாம் போகலாம். இந்நிலையில், திடீரென பார் வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று கார்ல்சன் தடை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டை மீறி தம்பதி யாராவது முத்தமிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில், ஆண் , பெண் திருமணத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது தம்பதியை பிரித்து பார்க்கும் நோக்கமோ எனக்கு இல்லை. ஆனால், பாருக்கு வரும் ஓரினச் சேர்க்கை பிரியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்.