Untitled Document
2012
04
May
இஸ்லாமியத்தை பழித்தால் மரண தண்டனை விதிக்க குவைத்தில் சட்ட திருத்தம்


குவைத் :இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் குவைத்திலும் கொண்டு வர எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இஸ்லாமியம், முகமது நபிகளை பழித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹமத் அல்நகி என்பவரை குவைத் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. இந்த சட்டத் திருத்தத்துக்கு மக்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. குவைத்தில் கடவுள், இஸ்லாமியத்தை பழிப்பது சட்டப்படி குற்றம். இதற்கு இப்போது சிறை தண்டனை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,