தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி யானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.Executive Officer Grade I (Post Code:1653) 14 இடங்கள். சம்பளம்: ரூ.9,300 ,34,800. வயது: 1.7.2025 தேதிப்படி 30 முதல் 35க்குள். தகுதி: கலை/அறிவியல்/வணிகவியல்/சட்டம் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்ந் தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கட்டணம்: ரூ.130/, மட் டும். (விண்ணப்ப கட்டணம் ரூ.30, தேர்வுக் கட்டணம் ரூ.100/,). இதை இந்தியன் வங்கி செலான் மூலம் செலுத்தவேண்டும். படிவத்தை இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணைய தளத்தை பார்க்கவும். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 26. கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 4. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook