ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் இன்று வின்ட்சர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. எனவே தொடரை கைப்பற்றும் நோக்கில் ஆஸியும், சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீசும் விளையாடும்.
வருண்ஆரோன் ரெடி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் வருண்ஆரோன் தற்போது குணமாகி உள்ளார். அடுத்தவாரம் அவர் முழு உடல்தகுதி பெற்றுவிடுவார். இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பில் அவர் களமிறங்குவார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வில்லை
ஆஸி. முன்னாள் கேப்டன் பான்டிங் கூறுகையில், ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு பெற்று விடுவேன் என தகவல்கள் பரவி வருகின்றன. நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரோடு ஓய்வு பெறபோவதில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் தென் ஆப்ரிக்க தொடரிலும் இடம்பெற விரும்புகிறேன் என்று கூறினார்.
முனாப்புக்கு 50 சதவீதம் அபராதம்
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் முனாப்படேல் பந்தில் அடுத்தடுத்து நிதின்சாய்னி 2 பவுண்டரிகளை அடித்தார். இதில் கோபமடைந்த முனாப், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்னையை நடுவர்கள் மற்றும் மும்பை கேப்டன் ஹர்பஜன் ஆகியோர் தலையிட்டு தடுத்தனர். இருப்பினும் அவர் எதிரணி வீரரை பார்த்து முறையற்ற சைகை செய்ததால் லெவல்1 குற்றத்தின்படி அவரது போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை பிடிக்க போட்டி நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook