பஞ்சாப் பீல்டிங்கால் தோல்வியடைந்தோம் : ஹர்பஜன்
பஞ்சாப் - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. அதன்பிறகு விளையாடிய பஞ்சாப் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 40 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 68 ரன் விளாசினார். இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஹசி கூறுகையில், எங்களுடைய பீல்டிங்கால் வெற்றி பெற்றோம். 164 ரன் என்பது எட்டக்கூடியதுதான். ஆனால் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் எங்களிடம் அருமையாக இருந்தது. மார்ஷ் அற்புதமாக பேட் செய்தார் என்றார். மும்பை கேப்டன் ஹர்பஜன் கூறுகையில், இரு அணிகளையும் ஒப்பிடுகையில் பீல்டிங் வித்தியாசம் மிகத்தெளிவாக தெரிந்தது. அவர்கள் சிறப்பான பீல்டிங்கால் 15க்கும் மேற்பட்ட ரன்களை கட்டுப்படுத்தினர். அற்புதமான முறையில் பீல்டிங் செய்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த ஆட்டத்தில் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்றார்.