மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான இந்தோதிபெத் போலீஸ் படையில் சப்இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. சப்இன்ஸ்பெக்டர் (டெலி கம்யூனிகேஷன்): 11 இடங்கள் (பொது8, எஸ்சி1, ஒபிசி2). சம்பளம்: ரூ.9,300ரூ.34,800 தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர படிகள். தகுதி: இயற்பியல், வேதியி யல், கணிதம் ஆகிய பாடங் களில் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி அல்லது இன்பர்மே ஷன் டெக்னாலஜி/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பிசிஏ அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேஷன்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஇ. வயது: 26.4.2012ன்படி 20ல் இருந்து 25க்குள். 2. ஹெட் கான்ஸ்டபிள் (டெலி கம்யூனிகேஷன்): 275 இடங்கள் (பொது159, எஸ்சி60, எஸ்டி19, ஓபிசி37). சம்பளம்: ரூ.5,20020,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர படிகள். தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவில் 45 சதவீத மதிப்பெண்களு டன் பிளஸ்2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக் கல்/ கம்ப்யூட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் எலக்ட்ரானிக்ஸ் /கம்யூனி கேஷன்/இன்ஸ்ட்ரூ மென்டேஷன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ. வயது: 26.4.2012ன்படி 18ல் இருந்து 25க்குள். 3. கான்ஸ்டபிள் (டெலி கம்யூனிகேஷன்): 15 இடங்கள் (பொது9, எஸ்சி2, எஸ்டி1, ஓபிசி3). சம்பளம்: ரூ.5,200 20,200 தர ஊதியம் ரூ.2000 மற்றும் இதரபடிகள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ/டிப்ளமோ விரும் பத்தக்கது. வயது: 26.4.2012ன்படி 18ல் இருந்து 23க்குள். 4. கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்): 120 இடங்கள் (பொது76, எஸ்சி21, எஸ்டி8, ஓபிசி15). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 18ல் இருந்து 25க்குள். விண்ணப்ப கட்டணம் ரூ.50/. இதனை சென்ட்ரல் ரெக்ருட் மென்ட் பீ ஸ்டாம்பாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, டிடியாகவோ செலுத்தலாம். டிடி அல்லது போஸ்டல் ஆர்டரை 1495ல் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண் டும். உடல்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். மேலும் விவரங் களுக்கு மார்ச் 31 ஏப்ரல் 6ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசை பார்க்கவும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook