போலி என்கவுன்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி : நாடு முழுவதும் நடந்த அனைத்து என்கவுன்டர்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. குஜராத் என்கவுன்டர் வழக்கை கோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. அதுபோல் நாடு முழுவதும் நடந்துள்ள என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த 10 வருடங்களில் அனைத்து மாநிலங்களிலும் நடந்த என்கவுன்டர்களை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வகுக்க வேண்டும் என்று குஜராத் அரசு கோரியிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.