Untitled Document
2012
13
Apr
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவிப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மதுரை : இன்று நந்தன தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். புத்தாண்டு தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிடம், வைரகிளி மற்றும் தங்க கவசமும், சுந்தரேஸ்வர பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து 10.30 மணி வரை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன், சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதே போல் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வைரக்கீரிடம் மற்றும் வைர நெற்றிப்பட்டை அலங்காரத்தில் அம்மன், சுவாமியை தரிசனம் செய்யலாம். இந்தாண்டு மீனாட்சி அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் ரூ.ஒரு லட்சம் செலவில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அழகர் கோவில், சுந்தரராஜ பெருமாள், நூபுர கங்கை, சோலைமலை முருகன், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி, காளமேகப் பெருமாள், சிம்மக்கல் சொக்கநாதர், திருமோகூர் காளமேகப் பெருமாள், மதனகோபால சுவாமி, இம்மையிலும் நன்மை தருவார், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி, ஜெயகணபதி கோயில் உள்பட பல கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,