Untitled Document
2012
13
Apr
திருவள்ளூர் மாவட்டத்தில் 208 பேருக்கு தாலிக்கு தங்கம் உள்பட ரூ.62.5 லட்சத்தில் திருமண உதவி : அமைச்சர்கள் வழங்கினர்


திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமணத்துக்காக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் விசாகன், திட்ட இயக்குநர் பிருதிவி ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ரூத் வெண்ணிலா வரவேற்றார். அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, ரமணா ஆகியோர் கலந்து கொண்டு 10ம் வகுப்பு முடித்த 166 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்த 42 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் ஆக மொத்தம் 208 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.62 லட்சத்து 50 ஆயிரத்துக்கான திருமண உதவி தொகை வழங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் புட்லூர் சந்திரசேகர், அம்மு மாதவன், குணாளன், ரவி, தட்சணா மூர்த்தி, சாந்திபிரியா சுரேஷ், கார்மேகம், மாவட்ட கவுன்சிலர்கள் டி.டி.சீனிவாசன், பாசூரான், ஒன்றியகுழு துணை தலைவர்கள் கந்தசாமி, சுதாகர், நாகம்மாள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,