நிலக்கரி சுரங்கத்தில் காலியிடங்கள்
இந்திய நிலக்கரி கழகத்தின் கீழ் பிலாஸ்பூரில் செயல்பட்டு வரும் தென்கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் கீழ் காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டு பணியிடங்களை நிரப்ப தகுதியான முன்னாள் ராணுவத் தினர் / முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard, Tech & Sup-Gr.G. 200 இடங்கள் (பொது101, ஓபிசி54, எஸ்சி30, எஸ்டி15). சம்பளம்: ரூ.8,757. வயது: 1.3.2012ன்படி 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் முன்னாள் ராணு வத்தினராகவோ, முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரராகவோ இருக்க வேண்டும். உடல் தகுதி தேர்வு, எழுத்து, நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
General Manager, (Manpower),
South Eastern Coalfields Ltd.,
P.B. No:60, Bilaspur (CG),
PIN: 495 006.
மேலும் விவரங்களுக்கு www.secl.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.20.