அணுமின் நிலையத்தை மூடக்கோரி வி.சிறுத்தைகள் உண்ணாவிரதம்
திருவள்ளூர் : கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவள்ளூரில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் அ.பாலசிங்கம் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சித்தார்த்தன், அருண் கவுதம், மோகனசுந்தரம், யோகா, இப்ராகிம், சரவணன் முன்னிலை வகித்தனர். அன்பு வரவேற்றார். உண்ணாவிரதத்தை திரைப்பட இயக்குனர் சிபி சந்தர் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் நீலவானத்து நிலவன், நீலன், வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். முடிவில் ஆனந்த் நன்றி கூறினார்.