விஜய்ஹசாரே டிராபி பைனலில் மும்பை - பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 49.2 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜாபர் 61, யாதவ் 50, தாரே 35 ரன் எடுத்தனர். பெங்கால் தரப்பில் சுக்லா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய பெங்கால் 46.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சுக்லா 117 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 106 ரன் விளாசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook