* டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட சிவாஜி நடித்த ‘கர்ணன்Õ படம், விரைவில் திரைக்கு வருகிறது.
* டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமாம். இதனால் மல்லுவுட் நடிகர்களை ஓரம்கட்டிவிட்டு, கேரளா கம்பெனி ஒன்று அல்லுவை அழைத்து சென்று பங்ஷன் நடத்த உள்ளதாம்.
* Ôமாற்றான்Õ படத்தை இயக்கியபடி, ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார் கே.வி ஆனந்த்.
* யுவராஜ் சிங்குடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகை அக்ஷரா கவுடா, தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார்.
* விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மலையாள காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் படிப்படியாக குணம் அடைந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு செயற்கை சுவாசம் தருவது இன்னும் சில நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* Ôமுதல்வர் மகாத்மாÕ படம் வரும் 30ம் தேதி ரிலீசாகிறது. அனுபம் கேர் நடித்திருப்பதால் இப்படம் இந்தியில் டப்பிங் ஆகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook