ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் புராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகலையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு, அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அன்றாட வாழ் வில் அறிவி யல் நுட்பங்களை பயன்படுத்த பழகிக்கொள்வது இப்படிப்பின் முக்கிய அம்சம். பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் படித்தால் 3ம் வருட படிப்பின்போது தனக்கான சிறப்பு பிரிவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்படும் பலவித நோய்களால், ஹோம் சயின்ஸ் படிப்பில் உணவு மற்றும் சத்துணவு துறை அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பொறுத்தவரை உணவு அறிவியல் துறை நிபுணர்கள், விளையாட்டுத் துறையில் ஆலோசகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்புகளை பெறலாம். இளநிலை பட்டதாரி ஆரம்ப சம்பளம் ரூ.20 ஆயிரம் வரை முதுநிலை பட்டதாரி ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அனுபவத்தை பொறுத்து ஊதியம் வெகுவாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை l Institute of Home Economics Delhi university l G.B. Pant University, Pant nagar l Avinashilingam University, Coimbatore l H.P.Krishi Vishwavidyalaya, Himachal pradesh l Kurukshetra University, Kurushetra l M.S. University, Baroda l Lucknow University, Lucknow l SNDT Women‘s University, Mumbai ஆகிய பல்கலைக் கழகங்கள் வழங்கி வருகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook