Untitled Document
கதிகலங்க வைக்கும் முனி ராசா
கருத்துகளை தெரிவிக்க

வீட்ல ஏதாவது திருட்டு போனா, எல்லாரும் விழுந்தடிச்சுட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாங்க. கண்டுபிடிக்கிறாங்களோ இல் லையோ, போலீஸ் மேல அவ்வளவு நம்பிக்கை. ஆனா, மதுரை மாவட்டம் சூரக்குண்டு பகுதி மக்களோட நம்பிக்கையே வேற. முனி  கோயிலுக்கு போய் நேர்ந்துக்கிட்டு வந்தா போதும்.. காணாமல் போன பொருள், வீடு தேடி வந்துடுமாம்.

‘‘இதெல்லாம் சாதாரணம் இல்ல சாமி... சக்தி வாய்ந்தது அந்த முனி கோயில். அங்க இருக்குற முனி ரொம்பத் துடியானது. தப்பு  செஞ்சவங்களையும், தன்னை சீண்டுனவங்களையும் அது சும்மா விடாது...’’ என்கிறார்கள் கிராம மக்கள். மதுரை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து 28&வது கிலோ மீட்டரிலும், மேலூரில் இருந்து இரண்டாவது கிலோ மீட்டரிலும் இருக்கிறது முனி கோயில். சூரக்குண்டு, தெற்குவளவு பகுதியில் உள்ள சுமார் 500 தலைக்கட்டுக்கு பாத்தியப்பட்டது இந்தக் கோயில்.

ஊரில் ஒரு தப்பு நடந்தாலும் முனி போட்டுப் பார்த்துடும் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நிறைய சந்தர்ப் பங்களில் அவர்களின் நம்பிக்கை பலிக்கவும் செய்திருக்கிறது. இதுபற்றி கேட்டால் கதைகதையாக சொல்கிறார்கள்.
கிராமத்தை சேர்ந்த முத்துராக்கு அம்மாளுக்கு சொந்தமான மாட்டை யாரோ ‘நகர்த்தி’ கொண்டு போய் விட்டார்களாம். எங்கு தேடி யும் கிடைக்காததால முனி கோயிலுக்கு போனார் முத்துராக்கு. ‘‘முனி ராசா... எம்மாட்டை எந்தக் காவாலிப் பயபுள்ளயோ திருடிபுட் டாம்யா. நீதான் ஒரு நியாயம் சொல்லணும். மாடு திரும்ப கெடச்சா... சேவல் வெட்டி போடறேன்..’’ என்று நேர்ந்துகிட்டு வீடு தி ரும்பினார்.

ரெண்டாவது நாளில், கோயில் சுவரோரமாக செடி, கொடிய மேஞ்சுகிட்டு இருந்ததாம் காணாம போன மாடு. அதுக்கு பக்கத்தி லேயே திருடன் ரத்தம் கக்கி, மயங்கிக் கிடந்தானாம். விட்டாலாச்சார்யா பட பாணியில் நடந்த அதிசயத்தை பிரமிப்பாக சொல்கி றார் முத்துராக்கு. வடநாட்டு இன்ஜினியர் ஒருவரை முனி சரணடைய வைத்த சுவாரஸ்யத்தை பற்றி சொல்கிறார் ஊர் பெரியவர் ஒருவர். அவர்  சொன்னது:

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பகுதியில நாலு வழி ரோடு போட்டாங்க. அதுக்காக குறுக்கே நிற்கிற முனி கோயிலை இடிச்சு ட்டு வேறு இடத்துக்கு மாத்தணும்னு சொன்னாங்க. நாங்கள்லாம் சேர்ந்து எவ்வளவோ எதிர்ப்பு காட்டியும் வடநாட்டு இன்ஜினிய ருங்க கேட்கல.  ‘‘எங்களுக்கு ரோட் போட்றதுதான் முக்யம் மேன்.

சாமி எல்லாம் அப்றம்...’’ என்று கூறிவிட்டு பணியில் இறங்கியுள்ளனர்.‘‘முனிகிட்டயே மல்லுக்கு நிற்கிறான்டா. இனி இவன் பாடு; அந்த முனி பாடு’’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள் கிராம மக்கள். ‘‘கோயில சுத்தி அளவு எடுத்துட்டு, பத்தடி கூட நகர்ந்திருக்க மாட்டார் வடநாட்டு இன்ஜினியர். வயத்த கலக்கி பேதி பிடுங்கிடுச்சு.
 அவரும் பார்க்காத டாக்டர் இல்ல. செய்யாத வைத்தியம் இல்ல. முனி விவகாரமாச்சே, டாக்டரால தீர்க்க முடியுமா? தோப்போரமா  அடிச்சு கொட்டுகிற பம்புசெட் மாதிரி இன்ஜினியருக்கு நிக்காம ஓடியது. சாப்பிட்டது, வாயை தாண்டுவதற்குள் வெளியே வந்து  விழுந்தது. ஆள் கிறங்கி, கிறுகிறுத்து போயிட்டாரு.

அவருகிட்ட வேலை பார்த்த உள்ளூர்க்காரங்க, மெதுவாக கிட்டபோயி, ‘இன்ஜினியர் அய்யா... ஒண்ணு சொன்னா தப்பா நினைச் சுக்க மாட்டீங்களே’ கேட்க, ‘ஒன் என்னா மேன்? ஹன்ட்ரட் கூட சொல்லு. என் பிராப்ளம் முதல்ல அரெஸ்ட் ஆகணும்’ என்று  புலம்பிவிட்டார்.

‘இது தெய்வ குத்தமுங்க அய்யா. முனிகிட்ட மனசுருக வேண்டி, நேர்த்திக்கடன் செலுத்தறதா வேண்டிக்குங்க. சட்டுனு நிக்கும்’னு  சொன்னாங்க. மறுப்பு தெரிவிக்கிற நிலையில அவரு இல்ல. முனிகிட்ட சரண்டர் ஆயிட்டாரு.... அப்புறம்தான் ‘அரெஸ்ட்’ ஆச்சு.  முனியோட சக்தியை உணர்ந்து கொண்ட இன்ஜினியர் 10,001 ரூபா காணிக்கையா செலுத்திட்டு, கோயிலுக்கும்... அந்த திசைக்கும்  ஒரு கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு... என்று சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர்.
இப்போதும் முனி பயம் எல்லாருக்கும் இருக்கிறது. ஊரில் யாராவது புதிதாய் வாகனம் வாங்கினால் ஒரு எட்டு இங்கு வந்து  சேவலோ... கோழியோ பலி கொடுத்து விடுவது வழக்கம். அதன் பிறகு ரத்தப்பலி கேட்காதாம்.

வாழ்க்கையை நகர்த்தி செல்பவை நம்பிக்கைகளே. சமயத்தில் அவை மூட நம்பிக்கை என்று சுட்டிக் காட்டப்படுவதும் உண்டு.  ஆனால், அனுவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது மூடநம்பிக்கையா அல்லது பரிபூரண உண்மையா என்கிற மர்மத்துக்கான  விடை தெரியும். தப்பு செய்தவர்களை முனி, ரத்தம் கக்கவிடும் என்கிற விஷயத்தை பொறுத்தவரை... சூரக்குண்டு மக்களுக்கு அது  நம்பிக்கை. மற்றவர்களுக்கு இன்னமும் அது மர்மமே!

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த