|
|||||
|
தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கருத்துகளை தெரிவிக்க களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பூதத்தான்குடியிருப்பு, புலவன்குடியிருப்பு, தானிஒடை பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் காட்டு யானைகள் கூட்டம் களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையை கடந்து, நெடுவிளை அருகே உள்ள பண்ணை மனைக்காட்டில் உள்ள விவசாயி துரைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்தன. வாழைகளை துவம்சம் செய்தன. யானைக் கூட்டங்களை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சில
|
|