இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று முதல் ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. பிராவோ 60 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. படேல் 12, சேவாக் 20, காம்பீர் 4, கோக்லி 3, ரெய்னா 5 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அதன்பின்னர் ரோகித்சர்மாவும், ஜடேஜாவும் அணியை மீட்டனர். ஜடேஜா 38 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித்சர்மா போல்டானார். 99 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 72 ரன் எடுத்தார். அடுத்த பந்திலேயே வினய்குமார் 18 ரன்னில் அவுட்டாக ஆட்டத்தின் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய உமேஷ்யாதவும், வருண் ஆரோனும் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடி னர். சமி வீசிய 48வது ஓவரில் ஆரோனும், உமேஷ்யாதவும் தலா ஒரு பவுண்டரிகள் விளாச 48.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. வருண்ஆரோன், உமேஷ் யாதவ் தலா 6 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 3, ரசல் 2, மார்ட்டின், சமி, பொல் லார்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சேவாக் கூறு கையில், போட்டி முடியும்வரை இருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருந்தேன். மீண்டும் ஒரு பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி கட்டத்தில் களமிறங்கிய வீரர்கள் அணிக்கு என்ன தேவையோ அதை சிறப் பாக செய்தனர். என்ன நடந்தாலும் கடைசிவரை களத்தில் நிற்க வேண்டும் என அறிவுரை கூறினேன். ரோகித் சர்மாவும், ஜடேஜாவும் அருமையாக ஆடினர். எளிதாக வெற்றி பெற வேண்டிய ஆட்டம் கடைசிவரை போராட்டமாக முடிந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம் என்றார். 2வது ஒருநாள் போட்டி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook