தடை விதித்ததால் பதிலடி 2 தயாரிப்பாளருக்கு நிகிதா கால்ஷீட் தர மறுப்பு
சென்னை : தடை விதித்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தர நடிகை நிகிதா மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் குடும்ப விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் நிகிதா. இவரது தலையீட்டால்தான் தர்ஷன் அவரது மனைவியை பிரிய நேர்ந்தது என்று காரணம் காட்டி கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிதிதாவுக்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தடையை நீக்கினர். தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நிகிதா. இந்நிலையில், கன்னட பட தயாரிப்பாளர் சங்க தலைவர் முனிரத்னா ‘கட்டாரி வீரா’ என்ற படத்தை தயாரிக்கிறார். உபேந்திரா, திவ்யா நடிக்கும் இப்படத்தில் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுமாறு நிகிதாவை கேட்டார் முனிரத்னா. ஜக்தேஷை ஹீரோவாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் கணேஷ் ஒரு படம் தயாரிக்கிறார். அதில் ஹீரோயினாக நடிக்குமாறு நிகிதாவிடம் கணேஷ் கேட்டுள்ளார்.
நிகிதாவோ இருவரிடமும் பெரும் தொகையை சம்பளமாக கேட்டார். அந்த சம்பளத்தை கொடுத் தால் மட்டுமே நடிக்க முடியும் என்றும் கறாராக கூறியுள்ளார். அதை கேட்டு இருவருக்கும் அதிர்ச்சி.
‘‘தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்த விவகாரத்தில் முனிரத்னா, கணேஷ் மீதான கோபம் இன்னும் அவருக்கு தீரவில்லை. கால்ஷீட் தராமல் பழி வாங்குகிறார். அதற்காகவே, தர முடியாத சம்பளம் கேட்டிருக்கிறார்’’ என்கிறது கன்னட சினிமா வட்டாரம்.