வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சமி கூறுகையில், இந்த தொடரில் டோனி ஆடாதது இந்திய அணிக்கு இழப்புதான். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எந்த அணியும் வீழ்த்தியது கிடையாது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணி மிக சிறப்பாக ஆடிவருகிறது. அவர்கள் தோல்வி அடைவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்த தொடர் எங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றார்.
3 ஆட்டத்தில் பிரவீன் இல்லை
தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அபிமன்யு மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook