புதுடெல்லி : டெல்லியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெறும் சமூகநீதி மாநாடு நாளை தொடங்குகிறது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் டெல்லியில் அளித்த பேட்டி: மக்களை ஒன்று திரட்டி சமூக நீதிக்காக போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (27ம் தேதி) ஆகிய 2 நாட்கள் மாநாடு நடக்கிறது. 26ம் தேதி காலை 9.30 மணிக்கு தேசிய தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். காலை 10 மணி, பிற்பகல் 2 மணிக்கு தேசிய அளவிலான கருத்தரங்கங்கள் நடக்கிறது. 27ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், ஆஸ்கர் பெர்ணான்டஸ், அஜீஸ் புர்னே, செய்யது ஷஹாபுதீன், மவுலானா முகமது உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர். இவ்வாறு அப்துர் ரஹ்மான் கூறினார். பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீப், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா, குழு உறுப்பினர் முகமது ஷாபி, அனீஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook