பெட்ரோலிய துறையில் எம்பிஏ!
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெட்ரோலியத் துறை முதன்மை வகிக்கிறது. இத்துறையில் தொழில்நுட்ப படிப்பு முடித்தவர்களுக்கும், மேலாண்மை கல்வி பயின்றவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ராஜீவ்காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப கல்லூரியில் எம்பிஏ படிப்புக்கு நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MBA in Petroleum Energy Management (2 வருடங்கள்) என்ற படிப்பில் சேர குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிஇ/ பிடெக் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மேலும் சிகிஜி 2011 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஜூன் 2011க்கு பிறகு நடந்த நிவிகிஜி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000ஐ ‘Rajiv Gandhi Institute of Petroleum Technology‘ என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
www.rgipt.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் வரும் டிச.2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் பிரின்ட்அவுட்டை தேவையான சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல்கள் மற்றும் கட்டண டிடி ஆகியவற்றுடன் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது ‘Application for MBA Admission 2012‘ என்று குறிப்பிட வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை ‘விஙிகி Admi‡‡ion Office, Rajiv Gandhi In‡titîte of Petroleîm Technology, Ratapîr Chowk, Rae Bareli 229316’ என்ற முகவரிக்கு டிச.5ம் தேதிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.